Breaking News
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தானா?

ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காக, அவரிடம் கதை சொல்ல அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கிறார் இயக்குநர் சாய் ரமணி.

‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களை இயக்கியவர் சாய் ரமணி. 35 வருடங்களாக ரஜினி ரசிகர் மன்றத்தின் உறுப்பினராக இருக்கிறாராம் இவர். அதுமட்டுமல்ல, ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸை வைத்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தையும் இயக்கியுள்ளார். அந்தப் படம், வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்திருக்கிறதாம். இப்போ எதற்கு இந்த பில்டப் என்று கேட்கிறீர்களா?

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ டிரெய்லரை ரஜினிக்கு காண்பித்தபோது, ‘லாரன்ஸை புதிய கோணத்தில் காட்டியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டிய ரஜினி, ‘புது கதை ஏதாவது வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டாராம். ஆனால், அப்போது எந்தக் கதையும் கையில் இல்லாததால், தற்போது ரஜினிக்காகவே ஒரு பக்கா கதையைத் தயார் பண்ணிவிட்டாராம். ரஜினியிடம் அதைச் சொல்ல அப்பாயின்மெண்ட்டும் கிடைத்துவிட்டதாம். ‘காலா’ பட ஷூட்டிங் இடைவேளையில் ரஜினிக்கு கதை சொல்லப் போகிறாராம் சாய் ரமணி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.