Breaking News
அரையிறுதிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா?- இங்கிலாந்து அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், மோர்கன் ஆகியோர் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: கெட்டி இமேஜஸ்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி இன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் இப்போட்டியில் இங்கிலாந்து அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்தி ரேலியா உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பட்டம் வெல் லக்கூடிய அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்பட்டது. ஆனால் துரதிருஷ்ட வசமாக நியூஸிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆடிய 2 போட்டிகளிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி தற்போது 2 புள்ளிகளுடன் இருக்கிறது.

அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்று இங்கி லாந்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அதே நேரத்தில் பிர்மிங் காமில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் மழை குறுக்கிட்டுள்ளதால், இப்போட்டி யிலும் மழை குறுக்கிடலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து, மழை ஆகிய 2 சவால்களை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட இதுவரை சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்ச், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகிய மூவர் மட்டுமே இந்த தொடரில் ஓரளவு பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மற்ற வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்களைக் குவிப்பது, ஸ்மித், வார்னர் ஆகியோரின் பேட்டிங்கைப் பொறுத்தே உள்ளது.

பேட்டிங்கில் பயிற்சி கிடைக் காவிட்டாலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பது அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, ஜோஸ் ஹசல்வுட் ஆகியோரைக் கொண்ட வலுவான பந்துவீச்சு வரிசை இங்கிலாந்தை திணறடிக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும்போது, இங்கிலாந்து அதிக தன்னம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அந்த அணி ஏற்கெனவே அரை யிறுதிச் சுற்றுக்கு முன்னேறி யிருப்பதே இதற்கு காரணம். அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு தெம்பைக் கொடுத்துள்ளது. அவர்களுக்கு உதவியாக மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகி யோரும் மட்டையைச் சுழற்றினால் இம்முறையும் இங்கிலாந்து அணி 300 ரன்களை எளிதாக கடக்கும்.

இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி, “இப்போட்டியில் வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப் புகள் உள்ளன. இதை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியை தொடரில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்து அணி நிச்சயம் முயலும். அதே நேரம் இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டுமானால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கடினமாக முயற்சிக் கிறோம் என்று கூறி தவறுகளை செய்துவிடக் கூடாது. மேலும் மழை குறுக்கிடுமோ என்ற பயம் இல்லாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜான் ஹஸ்டிங்ஸ், ஜோஸ் ஹசல்வுட், டிரெவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிறிஸ் லின், மேக்ஸ் வெல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா.

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஷேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயிம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

இடம் : பிர்மிங்காம்

நேரம் : பிற்பகல் 3

நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.