ரோஹன் போபண்ணாவுக்கு அர்ஜுனா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை: இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர்களில் ஒருவராக ரோஹன் போபண்ணா விளங்குகிறார். நேற்று முன்தினம் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் வென்று அவர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி னார். இந்நிலையில் அர்ஜுனா விருதுக்கு அவரது பெயரை பரிந்து ரைக்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவெடுத்துள்ளது.
ஏஐடிஏவின் செயலாளரான ஹிரண்மோய் சாட்டர்ஜி, இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
அர்ஜுனா விருதுக்கு ரோஹன் போபண்ணாவின் பெயரை மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வுள்ளோம். இந்த விருதுக்கு நாங்கள் ஏற்கெனவே பலமுறை அவரது பெயரை பரிந்துரை செய் திருந்தோம். ஆனால் அவருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை. தற்போது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றி ருப்பதால் இந்த விருதுக்கு அவர் மேலும் தகுதி உடையவர் ஆகிறார். எனவே இம்முறை அவருக்கு இந்த விருதை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
– பிடிஐ