சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா: ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடக்கம்
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சாம் ஆண்டன்.
தற்போது அப்படத்தில் அதர்வா நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ மற்றும் ஜீவா நடிக்கும் ‘கீ’ ஆகிய படங்களைத் தயாரித்துவரும் மைக்கேல் ராயப்பன், அதனைத் தொடர்ந்து சாம் ஆண்டன் – அதர்வா இணையும் படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.