Breaking News
எய்ம்ஸ்’ மருத்துவமனை எங்கு அமையும்? முதல்வர் விளக்கம்

”தமிழகத்தில், ஏதேனும் ஒரு இடத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே, அரசின் நிலைப்பாடு,” என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., – ஜெ.அன்பழகன்: மத்திய அரசின், எய்ம்ஸ் மருத்துவமனை, எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது?

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து வலியுறுத்தி னார். ஜெ., வேண்டுகோளை ஏற்று, தமிழகத் திற்கு அறிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறைந்தது, 200 ஏக்கர் நிலம் தேவை. தேர்வு செய்யப்பட்ட இடங் களை, மத்திய குழு ஆய்வு செய்து உள்ளது. அரசை பொறுத்தவரை, தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய வேண்டும்

என்பது தான். தற்போது,மேலும் சில விபரங்களை கேட்டுள்ளனர்; அவற்றை கொடுத்துஉள்ளோம்.

தி.மு.க., – பொன்முடி: பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், தஞ்சாவூர், செங்கிப்பட்டி யில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும்படி குறிப்பிட்டி ருந்தார். அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்திற்கு கேட்கின்றனர். அமைச்சரவையில் ஒற்றுமை இல்லையா?

முதல்வர் பழனிசாமி: மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது, அந்த உறுப்பினருக்கு தெரியாது. எய்ம்ஸ் மருத்துவமனை, அவருடைய தொகுதிக்கு அல்லது மாவட்டத்திற்கு வர வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், அந்த கருத்தை கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு எம்.எல்.ஏ., வும், தங்களுடைய தொகுதிக்கு, திட்டங்கள் வர வேண்டும் என்ற அடிப் படையில் பேசுகின்றனர். மற்ற கருத்து எதுவும் கிடையாது.எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற் காக, ஐந்து இடங்களை குறிப்பிட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்களும் இடத்தை பார்த்துவிட்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம்,
Advertisement

செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சரியாக இருக்கும் என்ற கருத்தை கூறினோம். விரை வாக, தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்ற அடிப்படையில், அதை குறிப்பிட்டோம். ஆனால், மத்திய அரசு ஏற்று கொள்ளவில்லை.

மீண்டும், அவர்கள் குறிப் பிட்ட இடத்தில், ஏதேனும் ஒரு இடத்தில், எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க, ஆராய்ந்து கொண்டிருக்கின் றனர்.

ஏற்கனவே குறிப்பிட்ட, ஐந்து இடங்களில், ஏதேனும் ஒரு இடத்தில், எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய வேண்டும் என்பது தான், தமிழ கத்தின் நிலைப்பாடு.இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.