Breaking News
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் ஆடுகிறார்கள்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி தொடங்குகிறது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்களும் இடம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களை சேர்ந்த 80 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் இருந்து 24 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு அணி அதிகபட்சமாக 3 வெளிமாநில வீரர்களை சேர்த்து கொள்ளலாம். அதில் இரண்டு பேர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க முடியும் என்பது போட்டி விதிமுறையாகும்.

சுரேஷ்ரெய்னா, யூசுப் பதான்

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசன் போட்டிகளில் ஆடும் அணிகளில் ஏதாவது ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதற்காக வெளிமாநில வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசன் போட்டிகளில் விளையாடும் அணிகளில் சேர்ந்து வருகிறார்கள்.

இந்த வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ்ரெய்னா கிராண்ட்ஸ்லாம் கிளப் அணியில் சேர்ந்து இருக்கிறார். யூசுப் பதான், யுஸ்வேந்திர சாஹல், பியுஷ் சாவ்லா, சஞ்சு சாம்சன், சந்தீப் ஷர்மா, அசோக் திண்டா, உன்முக் சந்த், மனோஜ்திவாரி, மனன்வோரா, ஹனுமா விஹாரி உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இந்த சீசனில் விளையாட தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

வீரர்கள் ஒதுக்கீடு

அணிகளுக்கான வெளிமாநில வீரர்கள் ஒதுக்கீடு மற்றும் முதல் சீசன் முடிவில் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கான ஒதுக்கீடு ஆகியவை சென்னையில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.