Breaking News
நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகர் மோகன்பாபு மகன்

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் தான் நடித்துக்கொண்டிருக்கும் 2 படங்களுக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போடவிருப்பதாக அறிவித்துள்ளார்

நடிகர் மோகன்பாபுவின் வாரிசுகள் அனைவரும் திரையுலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவரான மஞ்சு மனோஜ், “ஒக்கடு மிகிலாடு மற்றும் அதற்கடுத்து நான் நடிக்கவிருக்கும் படங்களே நடிகராக எனது கடைசி படங்கள். அனைவருக்கும் நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘திருடா திருடி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அறிமுகமானார் மஞ்சு மனோஜ். தொடர்ந்து ‘பிரயாணம்’, ‘பிந்தாஸ்’, ‘போடுகாடு’, ‘குண்டூரோடு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவரது முடிவுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் தனது குடும்பம் நடத்தும் பள்ளிகளை கவனிக்கவிருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

தற்போது மஞ்சு மனோஜ் நடித்துவரும் ‘ஒக்கடு மிகிலாடு’ படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு கதாபாத்திரம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.