Breaking News
இணைய பயங்கரவாதத்திற்கு எதிராக களமிறங்கும் கூகுள்

இணையதளத்தில் பயங்கரவாத கருத்துகளை பரப்புவோருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட கூகுள் நிறுவனம் இணைந்து முடிவு செய்துள்ளன.

பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதிகள், தங்களுக்குள் ரகசிய சங்கேத குறியீடுகளுடன் கூடிய தகவல்களை பகிர்ந்துகொள்ளவும், வதந்திகளை பரப்பிடவும், தங்கள் அமைப்பை புகழவும், இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் தேடுதளம் மூலமாக பயங்கரவாத கருத்துகளை பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றனர். அண்மையில் லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரில் ஒருவர், யூடியூப் தளத்தை பயன்படுத்தி வீடியோக்களை பகிர்ந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில் பயங்கரவாத கருத்துகளை பரப்பும் வீடியோக்களையும், அதற்கு ஆதரவான விளம்பரங்களையும் கண்டறிந்து களையெடுக்க கூகுள் நிறுவனமும், அதன் துணை நிறுவமான யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளன. மேலும், பயங்கரவாத கருத்துகள், அவதூறு செய்திகளை முற்றிலுமாக நீக்கவும், சம்பந்தப்பட்டவர்களை பிளாக் செய்யவும் கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.