Breaking News
அமெரிக்க விசா; தடை உத்தரவில் தளர்வு

6 இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரை பார்க்க, தொழில் ரீதியாக அமெரிக்கா வர 6 நாட்டினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடை:
6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்தார். அவரின் உத்தரவுப்படி, சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

தளர்வு:
இந்நிலையில் அதிபரின் இத்தடை உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த 6 நாட்டை சேர்ந்தவர்கள் தங்களின் நெருங்கிய உறவினரை பார்ப்பதற்காகவும், தொழில் ரீதியாகவும் அமெரிக்கா வருவோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.