‘பேஸ்புக்’ பயன்படுத்துவோர் 200 கோடியை எட்டியது
உலகம் முழுவதும், ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 200 கோடியை எட்டி உள்ளதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
கடந்த, 2004ல், மூன்று நண்பர்களுடன் இணைந்து, அமெரிக்க கல்லுாரி மாணவர்களுக்காக, ‘பேஸ்புக்’ என்னும் சமூக வலைதளத்தை, மார்க் ஜுக்கர்பெர்க் துவங்கினார். முதல் ஆண்டிலேயே இந்த வலைதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியது.
இந்நிறுவனம், 13 ஆண்டுகளில், ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ‘கடந்த மார்ச்சுடன், ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, 194 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட, 17 சதவீதம் அதிகம் என்றும், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இதர சமூக வலைதளங்களான, டுவிட்டரை, 32.8 கோடி பேரும், ‘ஸ்னாப்ஷாட்’டை, 16.6 கோடி பேரும் பயன்படுத்துவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.