Breaking News
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், ஏரியன் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

வெற்றிகரமாக…

தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது. இன்று அதிகாலை 2.29 மணிக்கு விண்ணில் பாய்ந்த ஏரியன் ராக்கெட், ஜிசாட்-17 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

அதிக எடை:

அதிக எடை கொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோளை, அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. இதனால் தான் பிரெஞ்ச் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஜிசாட்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.