Breaking News
கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் சின்னத்திரை திவ்யதர்ஷினி

நிகழ்ச்சி தொகுப்பாளராகி பெரிய திரைக்கு சென்றவர்கள் அதிகம் பேர் உண்டு. அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனை சொல்லலாம். சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்துள்ளார் டிடி என்னும் திவ்யதர்ஷினி.

பவர் பாண்டி படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. மேலும், டிடி முதன் முறையாக ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.