3-வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – மே.இ.தீவுகள் மோதல்
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த ஆட்டத்தில் அஜிங்க்ய ரஹானே சதமும், ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் அரை சதமும் அடித்ததால் இந்திய அணி 310 ரன்கள் குவித்தது. அதேபோல் இந்திய அணியின் பந்து வீச்சும் நேர்த்தியாக அமைந்தது. யுவராஜ் சிங் மீண்டும் நெருக்கடி உடனே களமிறங்குகிறார்.
தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் ரன்கள் குவிக்கும் பட்சத்தில் அணியின் வலிமை அதிகரிக்கும். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத் தில் 3 விக்கெட்கள் வீழ்த்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மீண்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளார்.
அனுபவம் இல்லாத மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமை யாக திணறி வருகிறது. தொடரில் 0-1 என பின் தங்கிய நிலையில் இளம் வீர்களான கைல் ஹோப், சுனில் ஆம்பிரிஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் கைல் ஹோப் இன்று களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர் தற்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் சாய் ஹோப்பின் சகோதரர் ஆவார்.