Breaking News
பேச்சை குறைத்து செயலில் இறங்குங்கள்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அதிமுகவினருக்கு முதல்வர் பழனிசாமி கட்டளை

பேச்சைக் குறைத்துக் கொண்டு கட்சிப் பணியை தீவிரமாக ஆற்றும் செயலில் இறங்குங்கள் என்று மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான தொடக்க விழா மதுரை ரிங் ரோடு பாண்டி கோயில் அம்மா திடலில் நேற்று நடந்தது. அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்கு வது என்பது மிகவும் பொருத்த மானது. எம்ஜிஆர் மதுரையை நேசித்த காரணத்தாலே மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங் களில் நடித்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் ஆனார்.

மதுரைதான் அவரை மறு அவதாரம் எடுக்க செய்தது. 1986-ம் ஆண்டு மதுரையில் கட்சி மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில்தான் வெள்ளி செங்கோலை ஜெயலலிதா அளித்தார். அவருக்கு பிறகு கட்சிக்கு ஜெயலலிதாதான் என்பதை அடையாளம் காட்டிய நாளாக அந்த மாநாடு அமைந்தது. இவ்வாறு கட்சியின் வரலாற்றிலும், எம்ஜிஆரின் வாழ்விலும், ஜெயலலிதாவின் இதயத்திலும் மதுரை நீங்கா இடம்பெற்றது. அண்ணா தொடங்கிய திமுகவை வெகுஜன இயக்கமாக மாற்றிக் காட்டியவர் எம்ஜிஆர். அவரின் அன்பான அணுகுமுறையால் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. சத்துணவு திட்டம் உள்ளிட்ட மக்கள் விரும்பும் எண்ணற்ற திட்டங்களையும் கூற லாம்.

1967-ல் துப்பாக்கியால் சுடப் பட்டதை அறிந்ததும், நாடே பதறியது. அப்போது எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்றனர் அவரது அரசியல் எதிரிகள். ஆனால், எம்ஜிஆர் இமயம் போல் எழுந்து நின்றார். எம்ஜிஆர் செய்த தியாகங் கள்தான், அவரை பொதுவாழ்வில் உயரச் செய்தது.

எம்ஜிஆரின் புகழ் இன்னும் நூறு ஆண்டுகள் நிலைக்கும். அதிமுகவை வெல்வதற்கு இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை. அண்ணாவின் பேச்சு, எம்ஜிஆரின் வசீகரம், ஜெயலலிதாவின் உழைப்பை கட்சியின் மூவர்ணக் கொடியாகக் கருத வேண்டும். கட்சியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத் தன்மையுடன் கட்சிப் பணியாற்ற வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும்.

மதுரைக்கு குடிநீர்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீரை கொண்டுவர 156 கி.மீ. ராட்சதக் குழாய்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இன்னும் 60 ஆண்டுகளுக்கு மதுரையில் குடிநீர் பிரச்சினை இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.