Breaking News
பிள்ளைகளின் படிப்பிற்காக அதிகம் செலவிடும் பெற்றோர்:13வது இடத்தில் இந்தியா

உலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதை அறிய, ‘கல்வியின் மதிப்பு’ என்ற பெயரில் எச்.எஸ்.பி.சி., வங்கி சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, 15 நாடுகளை சேர்ந்த, 8, 481 பெற்றோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியா, 13வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்திய பெற்றோர் தங்களுடைய ஒரு குழந்தையின் படிப்புக்காக (தொடக்க கல்வி முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை) 18 ஆயிரத்து 909 அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் 12 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்) செலவிடுகின்றனர் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த செலவு பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம், புத்தக செலவு, போக்குவரத்து செலவு, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தியாவை பொறுத்தவரை 89 சதவீத பெற்றோர் தங்களது பிள்ளைகள் அவர்கள் விரும்பி துறையில் முழு நேர வேலை வாய்ப்பை பெற முதுகலை பட்டம் பெறுவது அவசியம் என கருதுகின்றனர்.
மேலும், 59 சதவீத இந்திய பெற்றோர் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். 48 சதவீத பெற்றோர் பொது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இருந்தும், 38 சதவீத பெற்றோர் கல்விக்கான பிரத்யேக சேமிப்பு மற்றும் காப்பீடுகள் மூலமும் பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.