மோடியை ‘ஹிந்தி’யில் வரவேற்று அசத்தினார் இஸ்ரேல் பிரதமர்
மூன்று நாள் பயணமாக, இஸ் ரேல் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்துக்கே, தன் அமைச்சர் களுடன் சென்று, ஹிந்தியில் வரவேற்று அசத்தினார், இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹு.
இந்தியா – இஸ்ரேல் இடையேயான துாதரக உறவின், 25வது ஆண்டையொட்டி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசு முறை பயணமாக, இஸ்ரேலுக்கு வந்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.
முதல் பிரதமர்:மத்திய கிழக்கு நாடான
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமரான மோடியை, மரபுகளை மீறி, விமான நிலையத் துக்கே நேரில் சென்று, வரவேற் றார் நேதன்யாஹு. அப்போது, ‘என் நண்பனை வர வேற்கிறேன்’ என பொருள்படும் வகையில், ‘ஆப்கா சுவாகத் ஹை, மேரா தோஸ்த்’ என்று ஹிந்தியில் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து, இருவரும், இரண்டு முறை, கட்டித் தழுவி, தங்கள் நட்பை வெளிப்படுத்தினர். இதற்கு முன், போப் மற்றும் அமெரிக்க அதிபரை மட்டுமே, இஸ்ரேல் பிரதமர் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
சிவப்பு கம்பளம் விரித்து வழங்கப்பட்ட இந்த வரவேற்பின்போது, நேதன்யாஹு அரசின்
மோடி, ‘ஹிந்தி’யில், வரவேற்பு, அசத்தினார், இஸ்ரேல், பிரதமர்
அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று, மோடியை வரவேற்று, மிகப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளனர்.
விமான நிலையத்தில், பிரதமரை வரவேற்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு
கூறியதாவது:
கடந்த முறை, நாம் இருவரும் சந்தித்தபோது, ‘நம் நட்புக்கு வானமே எல்லை’ என்று மோடி கூறினார். ஆனால், நம் நட்புக்கு வானம் கூட எல்லை கிடையாது. விண்வெளி துறையிலும் நாம் இணைந்து செயல்படுகிறோம்.
சிறந்த தலைவர்
இந்தியாவை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இரு நாட்டுக்கும் இடையேயான உறவை, மேலும் விரிவுபடுத்த முடியும்; இன்னும் சிறப் பாக செயல்பட முடியும்.
இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக மட்டு மல்லாமல், உலகின் மிகச் சிறந்த தலைவராக மோடி உள்ளார். இந்தியப் பிரதமரை வரவேற்ப தற்காக, நாங் கள், 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.