Breaking News
தினகரன் திட்டத்துக்கு சசிகலா தடை!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அவரது உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மற்றும் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், கே.வி.ராமலிங்கம், ஜக்கையன், முத்தையா, தங்கதுரை ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

தினகரன்,திட்டம்,சசிகலா,தடை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரு கிறது. இந்த மனு தள்ளுபடியானால் அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை. எனவே சசிகலாவின் சீராய்வு மனு மீதான தீர்ப்பு மற்றும் ஜெ., மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரிய வழக்கு முடிவுக்கு பின், இரு அணிகளின் இணைப்பு முயற்சி, மீண்டும் அதிகாரபூர்வமாக துவங்க உள்ளது.

இதற்கிடையில் தினகரன் அணியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்களில், 30 பேரை சரிக்கட்டும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 எம்.எல். ஏ.,க்களையும் அவர் வளைத்து விட்டால் தினகரன் அணி காணாமல் போய் விடும்.

எனவே தன் அணியை தக்கவைக்க மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள தினகரன் திட்டமிட்டார். அதுபற்றி சசிகலா விடம் விவாதிப்பதற்காக நேற்று சிறையில் அவரை சந்தித்தார்.

தன் திட்டத்தை கூறி அதற்கு சசிகலாவிடம், தினகரன் அனுமதி கேட்டுள்ளார்.அதற்கு சசிகலா, ‘நான் சொல்வதை மட்டும் கேள்; எந்த காரணம் கொண்டும், நீ தனியாக சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம்; பொதுக்கூட்டங் கள் நடத்த வேண்டாம். ஆட்சி நீடிக்க வேண்டும். சீராய்வு மனு, தேர்தல் கமிஷன் வழக்கு முடிவுக்கு பின் அடுத்தகட்ட முடிவு எடுக்க லாம்’ என கூறியதாக தெரிகிறது.

தினகரனை தொடர்ந்து டாக்டர் வெங்கடேஷ் சசிக லாவை சந்தித்துள்ளார். பின் வெற்றிவேல், கே.வி. ராமலிங்கம், ஜக்கையன், முத்தையா, தங்கதுரை ஆகியோர் சந்தித்து பேசினர். இவர்கள் அனைவரும் தினகரனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

ராஜினாமா நெருக்கடி!

சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டால், சசிகலாவின் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை உறுதியாகி விடும். எனவே அவர் கட்சியின் பொதுச் செயலர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகும்.பொதுச் செயலர் பதவியை கைப்பற்றுவதற்கு முதல்வர் பழனிசாமி தரப்பினர் திரை மறைவில் காய் நகர்த்தும் தகவலை சசிகலாவிடம் தினகரன் தெரிவித்து உள்ளார்.

பொதுச் செயலர் பதவியை தக்கவைத்து கொள்வது குறித்தும், தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பது குறித்தும், தினகரனுக்கு சில ஆலோசனைகளை சசிகலா கூறியுள்ளதாக தெரிகிறது.

தினகரன் மீண்டும் கெடு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலாவை, அவரது உறவினர் தினகரன், நேற்று சந்தித்து, இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை

விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறை யில் தினகரன், இரண்டு மணி நேரம், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின், சிறையிலிருந்து வெளியில் வந்த தினகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அமைச்சர் ஜெயகுமார், பயம் காரணமாக ஏதேதோ பேசுகிறார். விரைவில், அவரது பயம்நீங்கி விடும். அ.தி.மு.க.,வின் இரு அணி களும் இணைவது குறித்து, அவர் பேசுவதாக கூறியது பற்றி எனக்குஎதுவும் தெரியாது.இரு அணிகளும் இணைவதற்கு, 60 நாட்கள் பொறுத் திருக்கும்படி, சசிகலா, என்னிடம் கூறியிருந் தார். அதன்படி, ஆக., 4 வரை பொறுத்திருங்கள். அதன்பின், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவோம். இரு அணிகளும் நிச்சயம் இணையும்.

திவாகரன், என் உறவினர். அவரும், நானும் சந்தித்ததாக, நடராஜன் கூறுவது தவறு. அது போன்ற எந்த சந்திப்பும் நடக்கவில்லை. நடராஜன், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளரல்ல. உறவினர்கள் என்ற முறையில், சமீபத்தில், சிறைச்சாலை வளாகத் தில்,திவாகரனை சந்தித்து,நலம் விசாரித்தேன்.

எங்களிடையே எந்த பிரச்னையும் இல்லை. சசிகலாவை, அ.தி.மு.க., பொதுச் செயலராக சந்திக்கவில்லை. என் சித்தி என்ற முறையில் தான் சந்தித்தேன். அவரிடம், அரசியல் எதுவும் பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அத்தைக்கு மீசை

‘அமைச்சர் ஜெயகுமார் கூறியது போல், கட்சி யிலிருந்து, உங்களையும், சசிகலாவையும் ஒதுக்கி வைத்து, கட்சி ஒன்றுபட்டால் என்ன செய்வீர்கள்’ என, செய்தியாளர்கள் கேட்ட தற்கு, ”அத்தைக்கு மீசை முளைத்த பின், சித்தப்பாவா என, பார்க்கலாம்,” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.