Breaking News
விஜய் பட டைட்டிலை மகனுக்காக தேர்வு செய்த மோகன்லால்

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், கடந்த சில ஆண்டுகளாக ‘த்ரிஷ்யம்’; உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய ஜீத்துஜோசப் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தார்

இந்த நிலையில் ப்ரணவ் முதன்முதலாக ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கு விஜய், த்ரிஷா நடித்த ‘ஆதி’ என்ற படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் சற்று முன்னர் வெளியாகி மலையாள திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால் நடிக்கவுள்ள ‘வெளிப்பாடின்டே புஸ்தகம்’ என்றா படத்தின் பூஜையின்போது ப்ரணவ்வின் ‘ஆதி’ மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் புது ஹீரோ ப்ரணவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.