Breaking News
’77 ஆயிரம் போலீஸ் இன்னும் தேவை!’

‘தமிழகத்தில், தற்போது போலீஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும், 77 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்,” என, தி.மு.க., – எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கூறினார்.

இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., – ஜெ.அன்பழகன்: தமிழக காவல் துறையில், 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. 1.23 லட்சம் பேர் பணிபுரிவதாக, கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், போலீசார் எத்தனை பேர் என கூற வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரையும் சேர்த்து தான், அந்த எண்ணிக்கை.

அன்பழகன்: தற்போது, 97 ஆயிரம் போலீசார் மட்டும் உள்ளனர். அது, 770 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை விதிகள்படி, 450 பேருக்கு ஒருவர் தேவை. தமிழகத்திற்கு இன்னும், 77 ஆயிரம் பேர் தேவை. குறைவான எண்ணிக்கையால், சட்டம் – ஒழுங்கை பராமரிப்பது சிரமம்.

முதல்வர்: இந்த அரசில் தான், ஏதோ பற்றாக்குறை இருப்பதுபோல் பேசுகிறீர்கள். உங்கள் ஆட்சியிலும், பற்றாக்குறை இருந்தது.

அன்பழகன்: ஆட்சி மாறும்போது மக்கள்தொகை, வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடும். ஆகவே, போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
‘தமிழகத்தில், தற்போது போலீஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும், 77 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்,” என, தி.மு.க., – எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கூறினார். இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., – ஜெ.அன்பழகன்: தமிழக காவல் துறையில், 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. 1.23 லட்சம் பேர் பணிபுரிவதாக, கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், போலீசார் எத்தனை பேர் என கூற வேண்டும். முதல்வர் பழனிசாமி: அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரையும் சேர்த்து தான், அந்த எண்ணிக்கை. அன்பழகன்: தற்போது, 97 ஆயிரம் போலீசார் மட்டும் உள்ளனர். அது, 770 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை விதிகள்படி, 450 பேருக்கு ஒருவர் தேவை. தமிழகத்திற்கு இன்னும், 77 ஆயிரம் பேர் தேவை. குறைவான எண்ணிக்கையால், சட்டம் – ஒழுங்கை பராமரிப்பது சிரமம். முதல்வர்: இந்த அரசில் தான், ஏதோ பற்றாக்குறை இருப்பதுபோல் பேசுகிறீர்கள். உங்கள் ஆட்சியிலும், பற்றாக்குறை இருந்தது. அன்பழகன்: ஆட்சி மாறும்போது மக்கள்தொகை, வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடும். ஆகவே, போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.