போர் விமானம், கப்பல்களில் இருந்து ஏவுகணைகளை வீசி தென்கொரியா ஒத்திகை
வடகொரியாவின் மிரட்டல்களை சமாளிக்க, தென்கொரியாவும் நேற்று ஏவுகணைகளை வீசி போர் ஒத்திகையில் ஈடுபட்டது.
சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றாமல், வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதற்கு ஐ.நா., அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், வடகொரியா தொடர்ந்து பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதனை நடத் தியது. அந்த ஏவுகணை அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று அமெரிக்காவின் எந்தப் பாகத்தை யும் (குறிப்பாக அலாஸ்கா வரை) தாக்கும் வல்லமை படைத்த தாக கூறப்படுகிறது. இதை அமெரிக் காவுக்கு பரிசாக அளிப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கிண்டலாக கூறினார்.
இந்நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எந்த நேரத்திலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் தென் கொரியாவும் நேற்று ஏவுகணை சோதனைகளை நடத்தியது. தென்கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் நேற்று ஒரு நாள் பல ஏவுகணைகளை வீசி ஒத்திகை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தென்கொரிய கப்பல் படை அதிகாரிகள் கூறும் போது, ‘‘இந்த ஒத்திகையில் 15 போர்க் கப்பல்கள், ஹெலி காப்டர்கள், போர் விமானங்கள் ஈடு படுத்தப்பட்டன’’ என்றனர். இதனிடையே அமெரிக்க ராணு வமும், தென்கொரிய ராணுவமும் இணைந்து கூட்டு போர் பயிற்சி யிலும் ஈடுபட்டு வருகின்றன.