Breaking News
என்னை கைது செய்தால் சட்டம் பாதுகாக்கும் : கமல் பேட்டி

”டிவி’ நிகழ்ச்சி தொடர்பாக என்னை கைது செய்வோம் என்றால், அது நடக்கட்டும். சட்டம் என்னைப் பாதுகாக்கும்,” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்று
வருகிறார். இந்நிகழ்ச்சி குறித்து இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் அளித்த பேட்டி : என்னை சிறையில் போட்டுப்பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். என்னை கைது செய்யச் சொல்லும்
கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும். சட்டம் என்னைப் பாதுகாக்கும் என கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது கூட்டு குடும்பத்தின் அச்சாரமான கூடி வாழ்தல் முறையை பேசுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த தவறும் இல்லை. இது ஏற்கனவே இந்தியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிதான். ஒருவேளை இந்தி தெரியாமல் இருப்பதால் என்னவோ புரியாமல் இருக்கலாம். கிரிக்கெட் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியம். என்னை நம்பும் மக்களுக்கு விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன். முத்தக்காட்சியில் சீரழியாத சமூகம் பிக்பாஸில்
சீரழிந்து விடுமா. பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி ஏற்றுக்கொண்டேன். எதிர்மறை விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன். தசாவதாரம் வெளியான போது என்னை கொண்டாடினார்கள், தற்போது எதிர்க்கிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் நான் எதிர்த்துப் பேசுவேன். தேசியகீதம் வங்கமொழி பாடல். அதை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. சாதி என்று பேசுகிறார்களே அதை முதலில் உங்களால் நீக்க முடியவில்லை. அரசியலுக்கு நான் வரவேண்டிய அவசியமில்லை, நல்ல தலைவர் யாராவது வந்தால் போதும்.
மத்திய மாநில அரசுகளுக்கு மார்க் போட மாட்டேன் என்றும், ஓட்டு மட்டுமே போடுவேன். சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது தவறு இல்லை. சைவம் என்ற சொல் இங்கு மதத்தோடு சேர்த்துப் பார்க்கப்படுகிறது. அசைவ உணவை விட சைவ உணவு சிறந்தது என்று மருத்துவரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., வரி விதிப்பை நான் முற்றாக எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி., வரியை நாங்கள் கோரியது போல் குறைக்கவில்லை, ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது. அதை மனதார பாராட்டுகிறோம். தமிழ்திரையை நசுக்கும் எந்த காரியத்தையும் அரசு மேற்கொள்ளக் கூடாது, மேசைக்கு அடியில் நடைபெறும் பேரமும் வேண்டாம். குளிர்பானங்களுக்கு கொடுக்கும் மரியாதையை கூட திரையரங்கு கட்டண வடிவத்திற்கு கொடுக்காதபோது எனக்கு கோபம் வரும்.பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் சரியாக செயல்பட்டிருக்கிறது, பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.