Breaking News
சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்

புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்:

புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்’ அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். ” முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைவாஸ்:

ஐ.பி.எல்., பாணியில் கடந்த 2014ல் துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கில், டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இத்தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைக்க ஐந்தாவது சீசனில் தமிழகம், அரியானா, குஜராத் மற்றும் உ.பி., என கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் பங்கேற்கும் தமிழகத்தின் சென்னை கபடி அணியின் பங்குகளை வாங்கி சக உரிமையாளர் ஆனார் சச்சின். இந்த அணிக்கு ‛தமிழ் தலைவாஸ்’ என பெயர் சூட்டப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.