ஜாகீர் நாயக் பாஸ்போர்ட் முடக்கம்
விசாரணைக்கு நேரில் ஆஜராகததால் மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
மத போதகரான ஜாகீர் நாயக் மீது பயங்ரவாதத்தை பரப்புவது, நிதிமோசடி குற்றச்சாட்டு ஆகியவை உள்ளன. வங்கதேசத்தில் இவரது பரப்புரையை கேட்டு 5 பேர் தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக இவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடபட்டிருந்தது.
இந்நிலையில் ஜாகீர் நாயக் கடந்தாண்டு ஜுலை 1ம் தேதி தப்பியோடினார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அரசு வெளியிடாமல் இருந்து வருகிறது. அவர் அடிக்கடி வேறு வேறு நாடுகளுக்கு பயணித்து வருவதாக மட்டும் தகவல் அளி்த்து வந்தது.
இதற்கிடையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் என்.ஐ.ஏ., ஜாகீர் நாயக் மீது பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. மேலும் அவரது இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன், மற்றும் பீஸ் டி.வி.,க்கு ஆகியவை மற்ற மதத்தின் மீது வெறுப்புனர்வை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதரங்களை திரட்டியதோடு அவருக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான 37 நிறுவனங்களை முடக்கினர்.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த ஜாகீர் நாயக் கடந்த ஜூலை 13ம் தேதிக்கு முன்பு நேரில் ஆஜராக நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகததால் அவரது பாஸ்போர்ட்டை முடக்க என்.ஐ.ஏ., சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து அவரது பாஸ்போர்ட் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட் கடந்தாண்டுதான் புதுப்பிக்கப்பட்டு , இன்னும் 10 ஆண்டுகள் வரை காலாவதி தேதி இருந்தது குறிப்பிடத்தக்கது.