விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?
ன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் அறிவிப்புவரும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.மேலும் கவிதை மூலம் தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார்
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்றனர்.
இது தொடர்பாக நடிகர் கமல் டுவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற. குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார்.
கவிதை மூலம் பதிலடி
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தொழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை.
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடி பணிவோர் அடிமையரோ?
முடி துறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்….
இவ்வாறு கவிதை மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.