அமெரிக்க ரோபோ போட்டியில் தங்கம் வென்ற இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் முதலாவது உலகளாவிய ‘ரோபாட்டிக்ஸ்’ போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 157 நாடுகள் கலந்துகொண்டன. இதில், மும்பையை சேர்ந்த மாணவர்கள், தங்கப்பதக்கத்துடன் கூடிய ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருதினை வென்று சாதனை படைத்துள்ளனர்.
உலகளாவிய சவால் மேட்ச் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளனர்.இந்த இந்திய அணிக்கு 15 வயதேயான ராகேஷ் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. அணியில் மிகவும் இளையவர் இவர்தான். இந்த அணியில் ஆதிவ் ஷா, ஹார்ஷ் பட், வாட்சின், ஆதிய்யன், தேஜாஸ், ராகவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த வெற்றி குறித்து அணியினர் தங்களது ‘பேஸ்புக்’ பக்கத்தில், “நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்ததில் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதல் குளோபல் சவால்-2017-ல் நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம்” என கூறி உள்ளனர்.