சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புகார்:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அதற்காக அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. புகார் தெரிவித்த சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அனுமதி மறுப்பு:
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க சென்ற டி.டி.வி., தினகரனை, சிறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். விதிகளை மீறி சசிகலாவை பலர் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தினகரன் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.