Breaking News
ரயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல : சிஏஜி அறிக்கை

இந்திய ரயில்வே துறையால் அளிக்கப்பட்டு வரும் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை சிஏஜி இன்று (ஜூலை 21) பார்லி.,யில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையில், ரயில்வேயால் வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவைகள் கெட்டுப் போனவையாகவும், பழையவற்றை சூடேற்றி வழங்கப்படுவதாகவும் உள்ளது. ரயில்நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அங்கீகாரம் பெறாதவைகளாகவும், பாட்டிலில் விற்கப்படும் பொருட்கள் காலாவதியானவையாகவும் உள்ளன.
ரயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறதா என முறையாக ஆய்வ செய்யப்படுவதில்லை. ரயில்களில் வழங்கப்படும் உணவு வகைகளில் பல தரம் குறைந்ததாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி அணி மற்றும் ரயில்வே நிர்வாகிகள் இணைந்து 74 ரயில்களில் உள்ள 80 ரயில்களில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு பிறகு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர் குழாய்கள் சுத்தமாக இல்லை. குப்பை தொட்டிகள் வைக்கப்படுவதில்லை, ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகள் மூடப்படுவதில்லை, ரயில் பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், தூசுகள், பூச்சிகள், கொசுக்கள் ஈக்கள் நிறைந்து உள்ளன சிஏஜி குழு தெரிவித்துள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.