Breaking News
காரைக்குடி காளை 158 ரன்கள் சேர்ப்பு

டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி – திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தூத்துக்குடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 69, கவுசிக் காந்தி 46 ரன்கள் சேர்த்தனர். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. என்.ஜெகதீசன் 10, சுப்ரமணிய சிவா 5, முருகன் அஸ்வின் 13, அஸ்வின் வெங்கட்ராமன் 26 ரன்ககளில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாடிய ஆர்.விவேக் 13 பந்துகளில், 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய அதே ஓவரில் கங்கா ஸ்ரீதர் ராஜூம் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரில் 8 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டன.

இதனால் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. ஆகாஷ் சர்மா வீசிய இந்த ஓவரில், முதல் ஐந்து பந்துகளில் தலா ஒரு ரன் வீதம் 5 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் சன்னி சிங் அவுட்டானார். முடிவில் திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதனால் தூத்துக்குடி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 69 ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடரின் 2-வது நாளான நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடி காளை – கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த காரைக்குடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் அனிருத்தா 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், கேப்டன் பத்ரிநாத் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் சேர்த்தனர். கோவை அணி தரப்பில் விக்னேஷ், சையது மொகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 159 ரன்கள் இலக்குடன் கோவை செய்ய தொடங்கியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.