Breaking News
பட்டாசு விற்பனைக்கு தடை? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

டில்லியில், பட்டாசு விற்பனைக்கு, கடந்தாண்டு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடையை, மீண்டும் அமல்படுத்த கோரிய மனு, இன்று(அக்.,6) விசாரணைக்கு வருகிறது.

தீபாவளி பண்டிகையின் போது, தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள, தேசிய தலைநகர் பிராந்தியங்களில், காற்று, ஒலி மாசை தடுக்கும் வகையில், 2016 நவம்பரில், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில், பட்டாசு விற்பனைக்கு, கோர்ட் தடை விதித்தது.

இந்நிலையில், சமீபத்தில், இந்த தடை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, குழு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், பாதி எண்ணிக்கையிலான கடைகளுக்கு மட்டுமே, பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்கவும், கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே, பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு விதித்த தடையை, மீண்டும் அமல்படுத்தக் கோரி, மூத்த வழக்கறிஞர், கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் நேற்று, மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, இன்று விசாரிக்க உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.