Breaking News
அமெரிக்காவில் 10 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த இந்தியர் மீண்டும் கைது

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஜெரால்டு பீட்டர் டிசோசா (வயது 58).    இவர் இன்டர்நெட் வழியே 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு கலிபோர்னியா கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டு 10 வருடங்கள் கழித்து வெளியே வந்த அவரை, பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்ற அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க பிரிவு அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.