உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
சொத்துமதிப்பு, சமூகத்தில் மதிப்பு, சார்ந்திருக்கும் தொழிலில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம், சாதனை, சேவை, அரசியல், நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போர்ஸ் பத்திரிகை சக்திவாய்ந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகியுள்ளார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த ஆண்டு பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32-வது இடத்தில் உள்ளார். எச்சிஎல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் 71-வது இடத்திலும் உள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 92-வது இடத்திலும், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்தில் உள்ளார். அதேபோல் மற்றொரு அமெரிக்க வம்சாவளி பெண்ணான ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்.