Breaking News
பயம் காரணமாகவே பெண்கள் பாலியல் தொல்லை பற்றி பேச மறுக்கிறார்கள் நடிகை வித்யாபாலன் பேட்டி
பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எப்போதும் விரல்கள் மீண்டும் தங்களையே சுட்டிக்காட்டும் என்ற பயத்தால், பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் சந்திக்கும் பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் பேச மறுக்கிறார்கள். இதனால் தான், கற்பழிப்போ அல்லது பாலியல் தொல்லையோ, அதை பற்றி பேச பெண்கள் கஷ்டப்படுவதாக நான் கருதுகிறேன்.
பாலியல் தொல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு துறையிலும் நிகழ்கிறது. இங்கு (சினிமா) அது எழுதப்படுகிறது. சினிமா துறை என்பது சமுதாயத்தின் ஒரு அங்கம். இங்கு பாலியல் சம்பவங்கள் ஊதி பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வளவு தான் வித்தியாசம்.
விலகி விடுவேன்
இந்தி திரையுலகில், பாலியல் தொல்லைகள் பலம்வாய்ந்த, வெற்றியாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஆனால், அவர்கள் அதனை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. நடிக்கும் போது, எனக்கு அசவுகரியமாக உணரும் நபர்களிடம் இருந்து, எப்போதும் நான் விலகி விடுவேன். இது தான் என்னுடைய பாதுகாப்பு நிபுணத்துவம்.
ஒரு பெண்ணாக, உங்களுக்கு ஆறாவது அறிவும், உள்ளுணர்வும் இருக்கிறது. வேறு வழிகளில் செயல்படுவது எனது கண்ணியத்துக்கு ஏற்படும் இழுக்காக கருதுகிறேன். அதற்காக மாற்று வழிகளை கையாளுபவர்களை நான் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட சூழல் இருக்கும்.
இவ்வாறு வித்யாபாலன் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.