வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – ஸ்டாலின்
சென்னை ஓட்டேரி அருகே மழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
ஆய்வுக்கு பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:
பருவமழைக்கு மாநில அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வெள்ள நிவாரண பணிகளில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், முதலமைச்சர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். ”மழைவெள்ளத்தை தெர்மாகோல் கொண்டு தடுப்பார்கள்”.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.