Breaking News
உருளைக்கிழங்கின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் நல்லதா?

உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் எல்லா சத்துக்களும் நமக்கு முழுமையாக சென்றடையும். ஆனால் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸினை கொடுத்து அவர்களை அதை சாப்பிடுவதற்கு மட்டுமே தயார் செய்கிறோம். உருளைக்கிழங்கு மூளையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உருளைக்கிழங்கு மட்டுமில்லாமல் அதன் தோலிலும் கூட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. அதன் தோலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

உருளைக் கிழங்கின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் :

உருளைக்கிழங்கை தோலுடன் சமைக்கும் போது அதன் சத்து இரட்டிப்பாகிறது. விட்டமின் சி, பி, கால்சியம் போன்ற சத்துகள் உருளைக் கிழங்கில் உள்ளது. இதில் 5கி நார்ச்சத்தும் 3கி புரோட்டீனும் உள்ளது.

உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க முடியும். இதில் மிக குறைந்த அளவிலான கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது.

இதை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தோலுடன் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கில் உள்ள பைடோகெமிக்கல் புற்றுநோயை தடுக்கிறது. மேலும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாகாமல் தடுக்கலாம்.
இதன் தோலில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் இவை உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இரவில் உருளைக்கிழங்கை உணவுடன் சேர்த்து கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.