சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது- கமல்ஹாசன் பேச்சு
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. இந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:-
மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது. அரசியல் வாதிகள் என்பவர்கள் தனியாக இல்லை நம்மோடுதான் இருக்கிறார்கள்.
மழைகளையும், ஆறுகளையும் சாமியாக கும்பிடுங்கள். வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட முடியாது. ஹைட்ரோகார்பனையும் சாப்பிட முடியாது.சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது. நாம் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தூங்கி கொண்டு இருந்து விட்டோம். இப்போது விழித்து கொள்ள வேண்டும். வேளாண்துறையை தொழில்துறையாக்கினால்தான் அனைவரும் வாழ முடியும்.பல் ஆண்டுகளாக விவசாயிகளின் தொல்லைகளையும், பெருமைகளையும் கேட்டு வளர்ந்தவன்.
தலைவனை தேடக் கூடாது, நியமிக்க வேண்டும். ஜனநாயகத்தில், மக்கள்தான் எஜமானர்களாக இருக்கிறார்கள்.
என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன் அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி. புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப்போல, நான் உதவ வந்துள்ளேன். நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்க வந்துள்ளேன்.
உழவனின் மகன் இல்லையென்றாலும் உழவனின் மருமகன் நான்.
ஒருவர் டெல்லியில் இருந்து என்னை பொறுக்கி என்றார் நான் பொறுக்கிதான் அறிவி ஞானம் என்றுவரும் போது நான் பொறுக்கிதான் என்பதை நான் ஏற்று கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்