சவுதி அரேபியா விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை இடைமறிக்கப்பட்டு அழிப்பு
ஏமனில் கிளர்ச்சி நேரிட்டு உள்ள பகுதியில் இருந்து சவுதி அரேபியாவின் இதயப்பகுதியாக விழங்கும் தலைநகரை மையமாக வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது, இந்த ஏவுகணை சரியான நேரத்தில் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதைவு பாகங்கள் தரையில் விழுந்தது. இந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.
சவுதியின் தலைநகரிலே பெரும் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என திட்டமிட்டு ஹவுதி கிளர்ச்சியாளார்கள் ஏவுகணையை வீசிஉள்ளனர்.
ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். அங்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் சவுதி அரேபியாவிற்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்தியில் கடும் கோபம் காணப்படுகிறது. கூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் முயற்சியாக கிளர்ச்சியாளார்கள் தரப்பில் ரியாத்தை குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டு உள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, புர்கான் 2 எச் என்கிற ஏவுகணையை அவர்கள் வீசி உள்ளனர். இதனை கண்டறிந்த சவுதி அரேபியா ராணுவம், ஏவுகணை இடைமறிப்பு பாதுகாப்பு கட்டமைப்பு உதவியுடன் அந்த ஏவுகணையை நாடுவானில் இடைமறித்தது அழித்தது. அப்போது பெரும் சத்தத்துடன், சிதை பொருட்கள் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்தது. சவுதி பாதுகாப்பு படை சரியான நேரத்தில் ஏவுகணையை இடைமறித்து அழித்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஏவுகணையை வீசிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் மையம் கொண்டு உள்ள பகுதியானது ரியாத்தில் இருந்து சுமார் 1,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை வீசிஉள்ளனர். அவர்களுடைய இலக்கு ரியாத் விமான நிலையம் என்றே அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகிறது.
விமான நிலையம் அமைந்து உள்ள பகுதியில் பெரும் சத்தம் கேட்டது உள்ள உள்ளூர் மக்கள் கூறிஉள்ளனர். இச்சம்பவத்தினால் அதிர்ஷ்டவசமாக பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் கூறிஉள்ளனர். இதனால் விமான நிலைய செயல்பாட்டில் எந்தஒரு பாதிப்பும் கிடையாது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் ஏவுகணையை இடைமறித்து அழிக்க பயன்படுத்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
ஏமனில் அமைதியை கொண்டு வரும் வகையில் அரசியல் தீர்வாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை மேற்கொண்ட முயற்சி தோல்வியிலே முடிந்தது, அங்கு சவுதி தலைமையிலான கூட்டமைப்பு தலையிட்டதில் இருந்து 8,600 பேர் உயிரிழந்து உள்ளனர். ஏமனில் காலரா நோய் பரவியதில் 2,100க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். கூட்டுப்படைகள் தாக்குதல், கடல் பரப்பு முற்றுகை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் மருத்துவமனைகளும் உதவியை பெற போராடி வருகிறது. ஏமன் அரசை ஐ.நா.வும் எச்சரித்து உள்ளது.