Breaking News
தமிழில் வருகிறது ஜாக்கிசான் அதிரடி ஆக்‌ஷன் படம்

ஜாக்கிசானின் ஆக்‌ஷன் படம் தி ஃபாரினர். லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜாக்கிசான். எதிர்பாராத சூழ்நிலையில், அவரது டீன் ஏஜ் மகள், கடத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். அரசியல் கலந்த தீவிரவாதம் தான் இதற்கு காரணம் என தெரியவருகிறது. உடனே பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார் ஜாக்கி. மேலும் புலனாய்வு செய்யும் போது, பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியான பியர்ஸ் புரோஸ்னனை சந்தித்தால், புரியாத சில புதிர்கள் விடுவிக்கபடும் என்பதை உணர்கிறார்.

அதன் பிறகு நடக்கும் ஆக்‌ஷன் அதகளம் படம் முழுக்க ரசிகர்களை தெறிக்கவிடும் என உறுதி தருகிறது பட டீம். கோல்டன் ஐ, கேசினோ ராயல், தி லெஜன்ட் ஆப் ஸோர்ரோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மார்ட்டின் கேம்பல். அவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலம் ஒன்றில் டபுள் டக்கர் பஸ்சில் நடக்கும் சண்டை காட்சி படத்தில் ஹைலட்டாக இருக்கும் என்கிறார் மார்ட்டின் கேம்பல். இப்படம் தமிழிலும் நாளை ரிலீசாகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.