Breaking News
நவ.12 வரை கனமழை இல்லை வானிலை மையம் அறிவிப்பு

‘தமிழகத்திற்கு வரும் 12 வரை, கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை; வெப்பச்சலனத்தால் மழை உண்டு’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை முன் எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:அரபிக்கடலில், கேரள பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால் கேரள எல்லையில் உள்ள, தமிழக பகுதிகளில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழை இருக்கும்.

சென்னையில் வானம் மேக கூட்டத்துடன் காணப்படும். வங்கக்கடலில் அந்தமானுக்கு கிழக்கே மலேசியா அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை கண்காணித்து வருகிறோம். அதனால், தற்போது, தமிழகத் திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.இவ்வாறு அவர்கூறினார்.இந்திய வானிலை மையம் நேற்று மாலை வெளியிட்ட கணிப்பு அறிக்கையில், ‘அந்தமான் தீவுகளில் இன்றுகனமழை பெய்யும். மற்ற இடங்களுக்கு வரும் 12ல், கனமழை எச்சரிக்கை இல்லை’ என கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத் துறைப் பூண்டியில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மற்ற இடங்களில் மழை நிலவரம்:நாகப்பட்டினம்,7; இரணியல், செங்குன்றம், எண்ணுார், மாமல்லபுரம், 6;வேதாரண்யம், திருவாரூர், மயிலாடி, அம்பா சமுத்திரம் சோழவரம், 5; கோவில்பட்டி, சங்கரன்கோவில், பாபநாசம், புழல், பூண்டி, பள்ளிப் பட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில், 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.ஓட்டப்பிடாரம் முத்துப்பேட்டை,

சிவகிரி, மணியாச்சி, கோவில்பட்டி, ஸ்ரீவில்லி., செங்கோட்டையில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

பிரதீப்ஜான் கணிப்பு:

‘சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் துவங்கி உள்ளது. இது மழைக்கான இடைவெளி காலம். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்’ என, சமூக வலைதளத்தில், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பக்கத்தில், வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.