Breaking News
மக்கள் தொகை அதிகரிப்பால் 600 ஆண்டுகளில் பூமி எரியும் : ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரிக்கை
 மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தால், அதிக மின்சாரம், எரி பொருள் பயன்பாட்டால் 600 ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரியும் என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகின்ஸ் கூறியுள்ளார்.

பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் பேசியதாவது:
உலகளவில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல் எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், இன்னும் 600 ஆண்டுகளில் இந்த பூமியே
எரிவதற்கான வாய்ப்பு உள்ளது.அந்த பேரழிவிலிருந்து மனிதர்களை பாதுகாக்க வேண்டுமானால், வேறு கிரகத்திற்கு மனிதன் செல்ல வேண்டும். சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் நட்சத்திரங்களுக்கு மக்கள் குடிபெயரலாம்.அல்பா சென்ட்டாரி என்ற நட்சத்திரம் சூரிய மண்டலத்திற்கு அருகே உள்ளது. 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த
நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களில் மக்கள் குடிபெயரலாம். பூமியைப் போன்று மக்கள் குடியிருக்க தகுந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்திற்குள் இருக்கின்றன. இன்னும் 20
ஆண்டுகளில் ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் சிறிய விமானத்தின் மூலம் இந்த நட்சத்திர கிரகத்தை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஸ்டீபன் ஹாகின்ஸ் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.