மீண்டும் டெங்கு: சுகாதார துறை எச்சரிக்கை
‘தமிழகத்தில், 52 பேரை உயிர் பலி வாங்கிய டெங்கு காய்ச்சல், மழை நின்ற, 10 நாட்களில், மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது’ என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
கொசுக்கள் ஆதிக்கம்:
‘தமிழகத்தில், நடப்பாண்டில், டெங்கு காய்ச்சலுக்கு, 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 52 பேர் உயிரிழந்துள்ளனர்’ என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், ‘ஏடிஸ்’ கொசுக்களின் ஆதிக்கத்தால், டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது.
எச்சரிக்கை:
தற்போது, வட கிழக்கு பருவ மழை பெய்து வருவதால், கொசுக்கள், கொசுப் புழுக்கள் அழிந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், நாகை, திருவாரூர் மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், மலேரியா, எலி காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற, மழைக்கால நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில், மீண்டும், டெங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.