Breaking News
மேனேஜர் மரணத்தால் மனம் உடைந்த ஜாக்கிசான்

தனது மேனேஜரின் திடீர் மரணத்தால் மனம் உடைந்து போயுள்ளதாக கூறினார் ஜாக்கிசான். ஜாக்கிசானின் மேனேஜர் வில்லி சான். வயது 76. ஜாக்கிசானின் வலது கரமாக இருந்தவர் இவர். அவரது கால்ஷீட், நிகழ்ச்சிகளை பார்த்துக் கொள்வது மட்டும் கிடையாது. ஜாக்கிக்கு நல்ல ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். வில்லி சானை பட தயாரிப்பாளராகவும் உயர்த்தியவர் ஜாக்கிசான். இந்நிலையில் ஹாங்காங்கில் நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். இது குறித்து ஜாக்கிசான் கூறும் போது, ‘வில்லியின் மரணத்தை நம்ப முடியவில்லை. மனம் உடைந்து போயுள்ளேன்’ என்றார் ஜாக்கிசான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.