லெஸ்பியன் ஆன ஜாக்கிசான் மகள்
நந்திதாதாஸ் நடித்த ஃபயர் படம் லெஸ்பியனை (பெண்ணோடு பெண் உறவு) மையமாக வைத்து உருவானது. இதுபோன்று நவநாகரீக பெண்கள் பலர் சேர்ந்து வாழ்கின்றனர். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர் ஜாக்கி சான். இவரது மகள் எட்டா. சமீபத்தில் இவர் தனது இணைய தள பக்கத்தில் கேர்ள்பிரண்ட் ஆன்டி ஆட்டம்னுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம் என தெரிவித்திருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி எட்டா கூறும்போது,’எனக்கு ஆதரவாகவும் என் மீது அன்பு பொழிபவராகவும் இருக்கிறார் ஆன்டி ஆட்டம்ன். எங்கள் உறவு பற்றி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை. எங்கள் உறவு பற்றி பலரும் பாசிடிவான கருத்து சொல்லும் அதே நேரம் பலர் கேலி பேசுகிறார்கள். ஆனால் நான் எதிர்மறை சூழலிலேதான் வளர்ந்தேன்.
அதனால் எனது அனுபவத்தை வெளிப்படையாக சொல்ல விரும்பினேன்’ என்றார். இதுபற்றி எட்டாவின் தோழி ஆன்டி கூறும்போது,’எட்டாபோல் ஒரு தோழியை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. எனக்குள் இருந்த எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த அவர்தான் எனக்கு வாய்ப்பு தந்தார். எங்களை கீழே வீழ்த்தும் முயற்சி நிறைய நடக்கிறது. அதிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம்’ என்றார்.