சீனாவிடம் வட கொரியர் கதறல் “என் மனைவி, மகனை நாடு கடத்தாதீர்கள்
வடகொரியாவில் இருந்து 2015-ம் ஆண்டு தென் கொரியாவுக்கு சென்று விட்டவர் லீ.
இந்த நிலையில் வடகொரியாவில் இருந்து ரகசியமாக எல்லை தாண்டி வந்து விட்ட குற்றச்சாட்டின் பேரில் சீனாவில் 10 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்த லீயின் மனைவியும், அவரது 4 வயது மகனும் அடங்குவார்கள்.
இது குறித்து அறிந்த லீ, உருக்கமான வீடியோ வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பி.பி.சி.க்கு கிடைத்துள்ளது. அதில் அவர் உருக்கமாக கூறி இருப்பதாவது:-
என் மனைவியையும், மகனையும் நாடு கடத்தி வடகொரியாவுக்கு அனுப்பி விடாதீர்கள். அப்படி அனுப்பினால் அவர்களை கொன்று விடுவார்கள் அல்லது சிறையில் போட்டு விடுவார்கள்.
சீன அதிபர் ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் என் குழந்தையை அவர்களது பேரக்குழந்தை போல கருத வேண்டும். எனது மனைவி, மகனை சுதந்திர நாடான தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தயவு செய்து எனக்கு உதவுங்கள். நாடு கடத்தலில் இருந்து எனது குடும்பத்தினரை காப்பாற்றுங்கள். ஒரு தந்தையாக இரு தலைவர்களிடமும் கெஞ்சுகிறேன். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எனது குழந்தை என்னை பெயர் சொல்லி அழைப்பது போல உணர்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.