Breaking News
வர்த்தகம் செய்ய அதிக வசதிகள் நிறைந்த நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளது: அருண் ஜெட்லி

சிங்கப்பூரில் நடந்த பைன்டெக் திருவிழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, ஆதார் திட்டம் மற்றும் அதன் வழியே பணபரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறுதல், பணமதிப்பிழப்பிற்கு பின்னர் அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் வழியேயான பணம் செலுத்துதல் திட்டத்தினை அதிக அளவில் செயல்படுத்தியது மற்றும் ஜூலை 1ந்தேதியில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் ஆகியவற்றால் நாடு டிஜிட்டல் மயம் ஆகி உள்ளது.

பெரிய அளவிலான டிஜிட்டல் மயம் மற்றும் பெரிய அளவிலான முறைப்படுத்துதல் ஆகியவற்றால் வர்த்தகம் செய்வதற்கு அதிக வசதிகள் நிறைந்த நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளது என அவர் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 31ந்தேதி எளிய முறையில் வர்த்தகம் செய்ய ஏற்ற நாடு குறியீடு தரவரிசையை உலக வங்கி வெளியிட்டது.  இதில் டாப் 100 பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறியுள்ளது.

இதனை சுட்டி காட்டி அருண் ஜெட்லி பேசினார்.  எனினும், முக்கிய நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் நாட்டிற்கு குறுகிய கால சவால்கள் உள்ளன என்பதனையும் அவர் ஏற்று கொண்டார்.

 

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.