Breaking News
திருப்பதி கிருஷ்ணர் கோயிலில் நமீதா திருமணம் : ‘நெட்’டில் வைரலாகும் பத்திரிகை

நட்சத்திரங்கள் திருமணம் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோயிலில் நடப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. நடிகை நமீதா தனது காதலர், நடிகர், தயாரிப்பாளரான வீர் என்கிற வீரேந்திராவை வரும்  24ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், சக நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நமீதாவின் திருமண அழைப்பிதழ் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நவம்பர் 22ம் தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. 24ம் தேதி சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயமான இஸ்கான் கோயிலில் காலை 5.30 மணிக்கு திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகு நமீதா நடிப்பாரா? இல்லையா? என்பதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம். ஆனாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு படங்களில் அவர் நடித்து முடிக்க முடிவு செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.