Breaking News
ஊழல் வழக்கு: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

‘கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் மற்றும், 15 பேர் குற்றவாளிகள்’ என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதையடுத்து தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

பீஹார் முதல்வராக, 1994 – 1996ல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார்.அப்போது, ‘லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி’ என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தண்டனை விபரம் 2018, ஜனவரி, 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து இன்று தீர்ப்பு வெளியாகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.