‘உலகின் அழகிய சிறுமி’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் பரவசம்
5 வயதான ஜாரே என்ற அந்த சிறுமியின் தோற்றம் வசீகரமானது. கவிதை பாடும் கண்கள், மென்மையான சருமம், கவர்ந்திழுக்கும் கூந்தல் என அழகான அத்தனை அம்சங்களும் இந்த சிறுமியிடம் சங்கமம்.
இந்த சிறுமியை மொபே பாமுயிவா என்ற புகைப்பட கலைஞர் பார்த்து பரசவசப்பட்டு படங்கள் எடுத்து தள்ளிவிட்டார். அவற்றை “ஓ… இவள் மனிதப்பிறவிதான்… ஆனால் இவள் ஒரு தேவதை” என்று தலைப்பிட்டு ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
அதில் அவர், “இவளை புன்னகைக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். இவளை சத்தமிட்டு சிரிக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். ஆனால் இவளை இவளது இயல்பான நிலையில் நமது கண்களின் வழியாக பார்க்க வைத்து இருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
ஜாரேயின் படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் ‘இவள் அன்றோ உலகின் அழகிய சிறுமி’ என்று பரவசம் அடைந்து உள்ளனர்.
இந்த சிறுமிக்கு ஜோமி என்று 7 வயதிலும், ஜோபா என்று 10 வயதிலும் இரண்டு மூத்த சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.