Breaking News
ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சஞ்சீவ் ராஜ்புத்துக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று 3வது நாள் நடந்த துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் (வயது 37) மொத்தம் 452.7 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

இந்த போட்டியில் 453.3 புள்ளிகள் எடுத்து சீனாவின் ஹு ஜிசெங் தங்கம் வென்றார். ஜப்பானின் மட்சுமோட்டோ டகாயுகி 441.4 புள்ளிகள் எடுத்து வெண்கலம் வென்றார்.

ராஜ்புத் கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட இதே பிரிவில் தங்க பதக்கம் வென்றவர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.