சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், விவசாயிகள் மத்தியிலும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்துள்ளது.
மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் தடை விதிக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையப்படுத்தக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.