பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா- பாக். வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர்.
இன்று ஆகஸ்ட் 22, ஆவணி 6ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகை இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.